கடையநல்லூரில் டிராக்டர் ஓட்டி வந்தவர் திடீர் மரணம்

X
சாலையோரம் சாய்ந்து நிற்கும் டிராக்டர்
By - S. Esakki Raj, Reporter |30 March 2022 9:49 AM IST
கடையநல்லூரில் பேருந்து நிலையம் அருகே டிராக்டர் ஓட்டி வந்தவர் திடீரென மரணடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பேருந்து நிலையம் அருகே திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் எம் சேண்ட் ஏற்றி கடையநல்லூரை சேர்ந்த பண்டாரம் என்பவர் வந்துள்ளார். பேருந்து நிலையம் எதிரே வரும் போது அவருக்கு திடீரென உடல் நலம் குன்றியதாக தெரிகிறது.
ஓடை அருகே லேசாக கவிழ்ந்த நிலையில் டிராக்டர் நிறுத்திய நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
டிராக்டர் ஓட்டிவந்த நபர் திடீரென இறந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாரடைப்பால் இறந்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu