துபாயில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள்

துபாயில் நடந்த சிலம்பப்போட்டியில் பதக்கம் வென்ற தென்காசி வீரர்கள்
துபாயில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் பொருளாதார தென்காசி மாவட்டம் இலஞ்சியை சேர்ந்த 4 இளம் வீரர் வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்றனர்
சர்வதேச இளைஞர் விளையாட்டு கல்வி கூட்டமைப்பின் 2023 தெற்கு ஆசிய சிலம்பம் 5 -ஆவது விளையாட்டு போட்டிகள் துபாய் நகரின் சிலிக்கான் சோலையின் ரிட் கல்லூரியில் நடைபெற்றது. இதில் புடோகன் கோப்பை மற்றும் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது
இந்த போட்டியில் தென்காசி மாவட்டம், இலஞ்சி குருகுலம் சித்திரச் சிலம்பம் பயிற்சி மையத்தில் உள்ள முகமது யாசர்(7,), மணிகண்டன்(11,), சித்ராஷ்ர(10,), கனிஷ்கா(15 )ஆகிய இளம் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு குத்து வரிசை மற்றும் சிலம்ப தனித்திறமை விளையாட்டில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றனர்
பொருளாதார நெருக்கடியையும் வென்ற வீரர்கள். இந்த இளம் வீரர் வீராங்கனைகள் துபாய் சென்று வருவதற்காக பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியானது. இவர்களுடைய குருநாதர் சிவகிருஷ்ணன், கடும் முயற்சி செய்து கடன் வாங்கி துபைக்கு அழைத்துச் சென்றார். அங்கு நடந்த போட்டியில் கலந்து கொண்ட இவரது மாணவர்கள் அபாரமாக விளையாடி தங்கப்பதக்கம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை போன்ற இளம் வீரர் வீராங்கனைகள் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதில் பொருளாதாரம் பிரச்னையாக இருந்தாலும் மனம் தளராமல் முயற்சி செய்து போட்டியில் பங்கேற்கச் செய்த தங்கள் குருவுக்கு ,பதக்கம் வென்றதன் மூலம் ஆறுதல் கூறிய வீரர் வீராங்கனைகளை உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்கள். அதோடு இப்படிப்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கு ஸ்பான்சர்ஷிப் தாராளமாகக் கிடைக்க வேண்டும். அப்போதுதான் இவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபிக்க முடியும். தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் உலக அரங்கில் முக்கியத்துவம் பெறும் வகையில் தமிழக அரசு சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்தால் இது போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு எளிதில் கிடைக்கும். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் விளையாட்டு ஆர்வலர்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu