சிலை காப்பகம் என்ற பெயரில் தெய்வ விக்கிரகங்கள் சிறை கைதியாக உள்ளது: பொன்.மாணிக்கவேல்
மாணவர்களுடன் கலந்துரையாடிய ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்.
தென்காசியில் நடைபெற்ற விளையாட்டு அகாடமி நிகழ்ச்சியில் மாணவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்ள ஆன்மீகத்தை கடைபிடிக்க வேண்டும் என பேசிய ஒய்வு பெற்ற ஐ.ஜி பொன்மானிக்கவேல் சிலை காப்பகம் என்ற பெயரில் தெய்வ விக்கிரகங்கள் சிறை கைதியாக உள்ளதாக தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தனியார் ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் குழந்தைகளை ஊக்கமளிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி பொன்மானிக்கவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர் மாணவர்களிடையே பேசுகையில், மாணவர்கள் கேள்வி கேட்கும் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு அவர்கள் தைரியத்துடன் செயல்பட வேண்டும். தைரியத்துடன் செயல்படுவதற்கு ஆன்மீகத்தை பின்பற்ற வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், சிலை காப்பகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் தெய்வ விக்கிரகங்கள் சிறைக் கைதிகளாக உள்ளது. இவைகள் பொதுமக்கள் வழிபாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வரிடம் மனு அளித்துள்ளதாகவும், நடவடிக்கைகள் எடுக்க தவறும் பட்சத்தில் சட்ட ரீதியாக ஆன்மிக வழியில் அணுக உள்ளதாகவும் நாளடைவில் தெய்வ விக்கிரகங்கள் சிறைக் கைதிகளாக இல்லாமல் பொதுமக்களின் வழிபாடுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu