தென்காசியில் பதட்டமான வாக்குச்சாவடிகள் : காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் (09.10.2021) நாளை இரண்டாம் கட்டமாக 5 யூனியன்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தென்காசி மாவட்டத்தில் (09.10.2021) நாளை இரண்டாம் கட்டமாக தென்காசி, செங்கோட்டை, குருவிகுளம், கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய 5 யூனியன்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இதனை முன்னிட்டு பதட்டமான பகுதிகள் மற்றும் வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதை உணர்த்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் கடையநல்லூர் யூனியனுக்கு உட்பட்ட அச்சம்பட்டி, மங்களாபுரம், கண்மணியாபுரம், வலசை, பாலஅருணாசலபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது எனவும் பொதுமக்கள் எந்தவித அச்சமுமின்றி தங்களது வாக்குகளை செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!