சமூக வலைதளங்களில் அரிவாளோடு வீடியோ பதிவிட்ட தென்காசி இளைஞர் கைது

சமூக வலைதளங்களில் அரிவாளோடு வீடியோ பதிவிட்ட தென்காசி இளைஞர் கைது
X

சமூக வலைதளங்களில் அரிவாளோடு வீடியோ பதிவிட்ட இளைஞர்.

சமூக வலைதளங்களில் அரிவாளோடு வீடியோ பதிவிட்ட தென்காசி இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கையில் அரிவாளோடு இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட செங்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

தென் மாவட்டங்களில் சமீபகாலமாக ஜாதி ரீதியிலான படுகொலைகள், ஜாதீய மோதல்கள், ஜாதீய வன்கொடுமைகள், போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெற்று வருகின்றது. இதற்கு காரணம் என்ன என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது சமூக வலைதளங்களில் ஏற்படும் மோதல் போக்கே காரணம் என தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து தென் மாவட்டங்களில் உள்ள காவல் துறையினர் மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினர் சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதுபோன்று ஜாதீய மோதல்களை தூண்டும் பதிவுகள் மற்றும் வீடியோக்களை கண்டறிந்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் உள்ள விஸ்வநாதபுரத்தில் வசித்து வரும் முத்து இருளப்பன் என்பவரது மகன் உதயகுமார் (வயது23). இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் அரிவாளை ஏந்தியபடி போட்டோ மற்றும் வீடியோக்களை எடிட் செய்து பதிவு செய்துள்ளார். அவரது வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரலான நிலையில் அதனை கண்ட செங்கோட்டை காவல்துறை அதிகாரிகள் அந்த இளைஞரை கைது செய்து அவர் உபயோகித்த அரிவாள் மற்றும் தொலைபேசியை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கி உள்ளனர். தொடர்ந்து இரண்டு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். மேலும் இதுபோன்று பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வீடியோக்களை பதிவு செய்தால் கடுமையான நாவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai healthcare products