தென்காசி மாவட்டத்தில் 16 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிவீரர்கள் தேர்வு

தென்காசி மாவட்டத்தில்    16 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்   அணிவீரர்கள் தேர்வு
X

தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க ஆலோசனை கூட்டம். 

Sports News Cricket - தென்காசி மாவட்ட 16 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் பணி வருகின்ற 24 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Sports News Cricket -தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க ஆலோசனை கூட்டம் கணக்கப்பிள்ளை வரிசையிலுள்ள அலுவலகத்தில் சங்கச் செயலாளர் ஸ்ரீநாத் ராமன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வருகின்ற 24ஆம் தேதி நடைபெற உள்ள வீரர்கள் தேர்வு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து சங்கச் செயலாளர் ஸ்ரீநாத் ராமன் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:

தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்கம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தோடு இணைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆகஸ்ட் 3ஆம் தேதி 16 வயதுக்குட்பட்ட மாவட்டங்களுக்கு இடையிலான போட்டி நடத்த உள்ளது. இதற்காக தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்கத்திலிருந்து வீரர்களை தேர்வு செய்ய உள்ளோம். வீரர்கள் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (24.07.2022) அன்று கணக்கப்பிள்ளை வலசை பிரீமியம் ஸ்போர்ட்ஸ் அகடாமியில் வைத்து நடைபெற உள்ளது. இதற்கு அனுமதி இலவசம்.

தேர்வுக்கு வரும் வீரர்கள் வெள்ளை நிற சீருடை மற்றும் ஷூ கண்டிப்பாக அணிந்து வர வேண்டும். ஆதார் மற்றும் பிறப்புச் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். தேர்வில் தென்காசி மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். எங்களின் நோக்கம் பாமர மக்களின் குழந்தைகளின் திறமைகளை வெளியே கொண்டு வர வேண்டும். இதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரம் மேம்படும். இதனை அவர்கள் பயன்படுத்த வேண்டும். திருநெல்வேலி முன்னாள் விளையாட்டு வீரர், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரதிநிதி, தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் அடங்கிய தேர்வு குழு வீரர்களை தேர்வு செய்யும். இதனை பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!