தென்காசி: வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய நாட்களிலும் வாக்கு எண்ணிக்கை 12.10.2021 ம் தேதியும் நடைபெறவிருக்கிறது. தென்காசி மாவட்டத்திலுள்ள 10 யூனியன்களில் ஒன்றான செங்கோட்டை யூனியனிலுள்ள செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆய்வு மேற்கொண்டு வாக்கு என்னும் மையத்திற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன், செங்கோட்டை காவல் ஆய்வாளர் சியாம் சுந்தர் மற்றும் காவல் துறையினர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி