தென்காசி: அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம் அருகே காட்டுப்பன்றி மின்னல் தாக்கி பலி
அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம் அருகே வயல்வெளியில் மின்னல் தாக்கி பலியான காட்டுப்பன்றி.
தென்காசி மாவட்டம் அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம் அருகே வயல்வெளியில் புகுந்து நெற்பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றி மின்னல் தாக்கி பலி.
தென்காசி மாவட்டம் வடகரை மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் காட்டு யானை, மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல வனவிலங்கள் உள்ளது. இந்த வனவிலங்குகள் விளை நிலங்களில் புகுந்து விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களை அவ்வப்போது நாசப்படுத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது.
இந்தநிலையில் அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம் அருகே உள்ள வயல்களில் நெற்பயிர்களை திண்பதற்காக நேற்று இரவு காட்டுப் பன்றிகள் புகுந்தது. அப்போது அப்பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் சுமார் 4 வயது மதிக்கத்தக்க காட்டுப்பன்றி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கடையநல்லூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் ஆகியோர் மின்னல் தாக்கி பலியான காட்டுப்பன்றியை பிரேத பரிசோதனைக்கு பின்னர் வனப்பகுதியில் புதைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu