தென்காசி அருகே கழுத்தில் பாம்புடன் டீ குடிக்க வந்த டெய்லர்

டீக்கடைக்கு கழுத்தில் பாம்புடன் தீ குடிக்க வந்த டெய்லர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் பகுதியை சேர்ந்தவர் ஜப்பார். டெய்லர். இவர் இன்று காலை பார்டர் பகுதியில் உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார்.
அப்போது கடையின் அருகே ஒரு நல்ல பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அச்சத்தில் சிதறி ஓடினர். அப்போது அங்கு நின்ற ஜப்பார், நல்லபாம்பின் அருகில் சென்று அதனை லாவகமாக பிடித்தார்.
பின்னர் அதன் தலையை ஒரு கையில் பிடித்தவாறு தனது கழுத்தில் போட்டபடி கடையில் டீ வாங்கி குடித்தார். இதனை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேலும் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தனர். பின்னர் அவர் அந்த நல்ல பாம்பை செங்கோட்டை குண்டாறு பகுதியில் வனப்பகுதியில் விட்டு சென்றார்.
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அந்த அளவிற்கு பாம்பு எல்லோரையும் பயமுறுத்தும் ஒரு ஜந்து. ஊர்ந்து செல்லும் பாம்பை பார்த்தாலே சிலருக்கு உடல் எல்லாம் நடுங்கும். தைரியமானவர்கள் பாம்பை கம்பால் அடித்து உடனடியாக கொன்று விடுவார்கள். ஆனால் இந்த நபர் பாம்பை கொல்லாமல் அதனை லாவகமாக பிடித்தது மட்டும் இன்றி அதனை கழுத்தில் போட்டுக்கொண்டு சென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
டீ குடித்து விட்டு அங்கிருந்து கிளம்பிய டெய்லர் ஜப்பார் பின்னர் அதனை காட்டில் கொண்டு போய் விடப்போவதாக தெரிவித்தார். எப்படியோ பலரை பயமுறுத்திக்கொண்டிருந்த பாம்பு டெய்லர் ஜப்பாரால் தான் உயிர் பிழைத்தது மட்டும் இன்றி மற்றவர்களின் பயத்தையும் போக்குவதாக ஊரை விட்டு சென்று விட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu