தமிழக - கேரள எல்லையில் 2வது நாளாக தீவிர கண்காணிப்பு

தமிழக - கேரள எல்லையில் 2வது நாளாக தீவிர கண்காணிப்பு
X

கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு தீவிரமாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

தமிழக - கேரள எல்லையில் சோதனை மேற் கொண்டு வருகின்றனர். தமிழகம் வருபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது

தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கேரளாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான புளியரை சோதனை சாவடியில் திடீரென சோதனையை அதிகப்படுத்தினர்.


செங்கோட்டை, புளியரை பகுதிகளில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்தனர். தமிழக கேரள வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டன. சுகாதாரத்துறையினர், இரண்டாவது நாளாக புளியரை சோதனை சாவடியில் தீவிர ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.

இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2.50 கிலோ மீட்டர் துாரத்திற்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து வருபவர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.


இல்லையேல் 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்று வேண்டும். இவை இருந்தால் மட்டுமே தமிழகத்தில் அனுமதி வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லக் கூடியவர்களும் இதே நடைமுறையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் கேரளாவிற்கு செல்லக்கூடிய அனைத்து நபர்களுக்கும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!