கலப்படத்தை தடுக்கதவறும் அரசு ஏன் ஆட்சியில் இருக்கவேண்டும் :கள் இயக்கம் கருத்து
செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு கள் இயக்க நிர்வாகி செ. நல்லசாமி
கலப்படத்தை தடுக்க தவறும் ஆளுமை இல்லாத அரசு ஏன் ஆட்சியில் இருக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் செ. நல்லசாமி தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் மேலும் அவர் கூறியதாவது:
அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள உணவு தேடும் உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு கள் இறக்கி அதை சந்தைப்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.
இந்த அனுமதியை வருகின்ற 2024-ஆம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னர், இந்த அனுமதியை வழங்காவிட்டால் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் போட்டியிடும் 39 வேட்பாளர்களும் தோற்கடிக்கப்படுவார்கள்.
கலப்படத்தை சுட்டிக்காட்டி தமிழக அரசு கள் இறக்குவதற்கு தடை விதித்துள்ள சூழலில், அதனை விலக்கி கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும். மேலும், கலப்படத்தை தடுக்க ஆளுமை இல்லாத அரசு ஏன் ஆட்சியில் இருக்க வேண்டும் .
மேலும், வருகின்ற ஜனவரி மாதம் 21-ஆம் தேதி கள் இறக்கி அதை சந்தைப்படுத்தும் போராட்டம் தமிழக முழுவதும் நடத்தப்படும். அந்த நாளை கள் இறக்கும் தினமாக அறிவிக்கப்படும்.
தற்போது காவேரி பாசன பகுதியில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் நீரின்றி கருகி வரும் சூழலில் கர்நாடக அரசிடம் இருந்து மாதம் ஒருமுறை நீர் பங்கீட்டு முறையை தவிர்த்து, தினம்தோறும் நீர் பங்கிட்டு முறையை பெற்றால் இது போன்ற நிலைமை ஒருபோதும் வராது என அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu