தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் தென்காசி மாவட்ட எஸ்.பி ஆய்வு

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் தென்காசி  மாவட்ட எஸ்.பி ஆய்வு
X

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் தற்போது மீண்டும் கொரோனா பரவ துவங்கியுள்ளதால் தடுப்பு நடவடிக்கையாக கேரளாவிலிருந்து வரும் நபர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் வர அனுமதிக்க படுவார்கள் என்றும்,போலி சான்றிதழ்கள் மூலம் தமிழகத்திற்குள் நுழைய முயற்சி செய்யும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். மேலும் சோதனைச் சாவடிகளில் பணியில் உள்ள காவலர்கள் முக கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் தங்களின் பணியினை முறையாக செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!