ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார திருவிழா: பக்தர்கள் தரிசனம்

ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார திருவிழா: பக்தர்கள் தரிசனம்
X

ஆய்க்குடியில் நடைபெற்ற கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பக்தர்கள் கலந்து காெண்டு தரிசனம் செய்தனர்.

ஆய்க்குடியில் நடைபெற்ற கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பக்தர்கள் பங்கேற்றனர்.

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் நடைபெற்ற கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பக்தர்கள் பங்கேற்றனர்.

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா கடந்த தீபாவளியன்று (4.11.2021) கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. நாள்தோறும் சுவாமி பகல் மற்றும் இரவு வேளைகளில் ரிஷபம், மயில், யானை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதிஉலா, தீபாராதனை நடைபெற்றது.

ஆறாம் திருநாளான இன்று சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா ஆய்க்குடி சிவன் கோவில் மைதானத்தில் நடைபெற்றது. மகாசூரன், சிங்கமகா சூரன், ஆனைமுகசூரன் ஆகிய 3 அசுரர்களை சுவாமி முருகன் வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவில் தென்காசி மாவட்டத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாம் தரிசனம் செய்தனர்.

இதேபோல் தென்காசி, பண்பொழி, பாவூர்சத்திரம், இலஞ்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள முருகர் ஆலயங்களில் சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா