செங்கோட்டையில் பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி மாணவிகள் போராட்டம்

செங்கோட்டையில் பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி மாணவிகள் போராட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் செங்கோட்டை காவல் ஆய்வாளர் பாலமுருகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

செங்கோட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை மாற்றக்கோரி மாணவிகள் திடீர் போராட்டம் நடத்தினார்கள்.

செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாசனை திரவியம் உடைந்து 15க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கம் ஏற்பட்ட சம்பவம் எதிரொலியாக தலைமை ஆசிரியரை மாற்ற கோரி நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 12-ஆம் வகுப்பு வகுப்பறையில் வாசனை திரவியம் ஒன்று கீழே விழுந்து உடைந்ததில் அதிகளவில் நறுமணம் வீசிய காரணத்தினால் 15 க்கும் மேற்பட்ட மாணவிகள் திடீரென மயக்கம் ஏற்பட்டு செங்கோட்டை மற்றும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு மாணவிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பெற்றோர்கள் ஒன்றிணைந்து தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, இந்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை நீடித்து வரும் நிலையில், தற்போது தலைமை ஆசிரியரை மாற்ற கோரி மாணவிகள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தென்காசி வருவாய் கோட்டாட்சியர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது, தலைமை ஆசிரியரை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக மாணவிகள் மனு அளித்தால் அந்த கோரிக்கை தொடர்பான மனுவை அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக ஆர்டிஓ லாவண்யா மாணவிகளுக்கு வாக்குறுதி கொடுத்த நிலையில் இரண்டு மணி நேரமாக போராடி வந்த மாணவிகள் கலைந்து சென்று பள்ளிக்குள் சென்றனர்.

குறிப்பாக, தலைமை ஆசிரியரை மாற்ற கோரி மாணவிகள் சுமார் 2 மணி நேரமாக போராட்டம் நடத்திய சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story