சிறப்பு ரயில் கடையநல்லூர், சங்கரன்கோவிலில் நின்று செல்ல தமுமுக கோரிக்கை
தென்காசி தமுமுக மாவட்ட செயலாளர் முகம்மது பாசித்.
தென்னக ரயில்வே சார்பில் பயணிகள் வசதிக்காக நெல்லையில் இருந்து தென்காசி வழியாக தாம்பரத்திற்கும், மறு மார்கமாக தாம்பரத்திலிருந்து மதுரை, தென்காசி, நெல்லை வரை இயக்கப்படும் கோடைகால சிறப்பு வாராந்திர ரயில் (06004/06003) நேற்று முதல் ஜூன் மாதம் 27 தேதி வரை இயக்கப்பட உள்ளது.
இரு மார்கங்களிலும் பயணிக்கும் இந்த கோடைகால வாராந்திர சிறப்பு இந்த ரயில், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் ரயில்வே நிலையத்தில் நிறுத்தம் கிடையாது. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் இன்று ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.
ஆனால் கோடை கால சிறப்பு ரயில் மற்றும் இந்த இரண்டு இரயில் நிலையங்களிலும் நின்று செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சென்னை போன்ற தலைநகரங்களில் பல்வேறு தொழில் சம்பந்தமாக மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை நிறுவனங்களில் வேலை செய்வதற்காகவும், அதிகமாக இந்த ரயில் பயணங்களையே பயன்படுத்தும் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கடுமையாக அவதிக்குள்ளாவார்கள்.
இதுபோன்ற பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டும், தற்போது ரமலான் மாதம் என்பதால் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட இருக்கும் கடையநல்லூர் போன்ற இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் இது சிறப்பு வாராந்திர ரயில் கட்டாயம் நின்று செல்ல மதுரை கோட்ட மேலாளருக்கும், தென்னக ரயில்வே பொது மேலாளருக்கும் தென்காசி தமுமுக மாவட்ட செயலாளர் முகம்மது பாசித் பதிவு தபால் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu