கடையநல்லூர் அருகே கலெக்டர் தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்

கடையநல்லூர் அருகே கலெக்டர் தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்

மனுநீதி நாள் முகாமில் உள்ள கண்காட்சியை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் பார்வையிட்டார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள நகரம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது

கடையநல்லூர் அருகே நகரம் ஊராட்சி பகுதியில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள நகரம் பகுதியில் இன்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தலைமையில் மனுநீதி நாள் முகம் நடைபெற்றது. இம்முகாமில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மனுநீதி நாள் முகாமில் கலந்து கொண்டனர்.

முகாமில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இன்று 97 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் அதில்.57 மனுக்கள் தகுதியானவை என கண்டறியப்பட்டுள்ளது. அதற்குண்டான நடவடிக்கை வரும் நாட்களில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்

இம்முகாமில் மருத்துவத்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, மற்றும் பல்வேறு அரசு துறை, சார்ந்தவர்களும் பங்கு பெற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.

தோட்டக்கலை துறையின் மூலமாக உடலுக்கு ஆரோக்கியமான அனைத்து தானிய வகைகளை பொது மக்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தனர்.

மேலும் நிகழ்ச்சியின் முடிவில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நகரத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்களும் விவசாயிகளும் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Tags

Next Story