தென்காசி அருகே பெண்ணிடம் தகராறு செய்தவர் அடித்துக் கொலை

தென்காசி அருகே பெண்ணிடம் தகராறு செய்தவர் அடித்துக் கொலை
X
மேலகடையநல்லூரில், பெண்ணிடம் தகராறு செய்து, தொல்லை கொடுத்ததாக, ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் மேலகடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கோபால் (வயது 50). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. இவர், அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப் பெண் அவரது பெற்றோர்களிடம் தகவல் தெரிவிக்கவே, அந்தப் பெண்ணின் தாய்மாமன் உடனே வந்து கோபாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே கைகலப்பு ஆனது. ஒருகட்டத்தில் கோபத்தில் கோபால் மீது, அந்தப் பெண்ணின் தாய் மாமன் பெரிய பாறாங்கல்லை தூக்கி தலையில் போட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த கோபால், ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்கவே, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த கடையநல்லூர் போலீசார், கோபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கோபாலை கொலை செய்த புளியங்குடி சிந்தாமணி பகுதியை சேர்ந்த மாரிப்பாண்டி (வயது 31) என்பவரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடையநல்லூர் பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்