Sengottai Rss Rally Case Filed செங்கோட்டை RSS ஊர்வலம் 228 பேர் மீது வழக்குப்பதிவு

செங்கோட்டையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடந்தது.
Sengottai Rss Rally Case Filed
தமிழ்நாடு அரசு ஆர் எஸ் எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த நிலையில் உச்ச நீதிமன்ற அனுமதியோடு ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது.தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வீரவாஞ்சி திடலில் ஆர்எஸ்எஸ் 98 வது ஆண்டு விழா, வள்ளலாரின் 200 வது ஆண்டு நிறைவு மற்றும் மகாவீரரின் 2550 ஆண்டு விழாவை முன்னிட்டு சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் சமுதாய நல்லிணக்க ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் கடந்த 19 தேதி நடைபெற்றது.
செங்கோட்டை மேலரத வீதியில் துவங்கிய அணி வகுப்பு கீழரதவீதி காவல்நிலையம், தாலூகா அலுவலகம் வழியாக நகரின் பல்வேறு முக்கிய வழியாக 200-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கலந்து கொண்டனர்.ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் பேரணி நிகழ்வில் தென்காசி மாவட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பேரணியின் போது ஆர்.எஸ்.எஸ் பேரணியில் கலந்துகொண்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பேரணியில் கலந்து கொண்ட 228 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தென்காசி மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி கோஷம் எழுப்பியதாக ஊர்வலத்தில் கலந்து கொண்ட 228 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பகையைத் தூண்டுவது, அனுமதியின்றி கருத்துக்களை வெளிப்படுத்துவது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், அனுமதியின்றி பதாதைகளை ஒட்டியதாகவும் செங்கோட்டை துணை வட்டாட்சியர் ராஜாமணி அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu