வாக்கு எண்ணும் மையம்: கலெக்டர் ஆய்வு

வாக்கு எண்ணும் மையம்: கலெக்டர் ஆய்வு
X
தென்காசி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள, வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர்.

தென்காசி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், தென்காசி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர், மற்றும் சங்கரன்கோவில் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை கொடிகுறிச்சி பகுதியில் யூ. எஸ். பி கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சமீரன், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருமான சுகுனா சிங் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தற்போது அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையமானது 5 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து வாக்கு இயந்திரங்கள் கொண்டுவருவதற்கு எளிதாகவும், இடவசதியும் முறையாக இருப்பதால் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகள், தடுப்புகள் அமைப்பது, கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் பழைய வழக்கு பதிவுகள், அடிப்படையில் மாவட்டத்தில் 96 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது