முப்படைத் தளபதி பிபின் ராவத்திற்கு அஞ்சலி செலுத்திய பள்ளி குழந்தைகள்

முப்படைத் தளபதி பிபின் ராவத்திற்கு அஞ்சலி செலுத்திய பள்ளி குழந்தைகள்
X

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்திய பள்ளி மாணவ, மாணவியர்.

இடைகால் அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்படைத் தளபதி பிபின் ராவத்திற்கு பள்ளிக் குழந்தைகள் அஞ்சலி செலுத்தினர்.

நீலகிரியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பள்ளி குழந்தைகள், சமூகநல அமைப்புகள், அரசியல் கட்சிகள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் இடைகால் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், சிகிச்சை பெற்றுவரும் ஏர் மார்ஷல் வருண் சிங் பூரண குணமடைய பிராத்தனையும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லதுரை, முன்னாள், இந்நாள் ராணுவ வீரர்கள், மற்றும் பள்ளி குழந்தைகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியும், பிரார்த்தனையில் ஈடுபட்டனர். முன்னதாக பள்ளியில் பள்ளி குழந்தைகள் தயார் செய்த ராணுவம் மற்றும் விமானப் படையின் செயல்பாடுகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.

Tags

Next Story
ai marketing future