கொல்லம் ரயிலில் விரிசல்! கண்டுபிடித்த ஊழியருக்கு பாதுகாப்பு விருது!

கொல்லம் ரயிலில் விரிசல்! கண்டுபிடித்த ஊழியருக்கு பாதுகாப்பு விருது!
X

பட விளக்கம்: கொல்லம் ரயிலில் விரிசலை கண்டுபிடித்த ஊழியருக்கு பாதுகாப்பு விருது வழங்கப்பட்ட போது எடுத்த படம்.

கொல்லம் ரயிலில் விரிசல் இருப்பதைக் கண்டுபிடித்துக் கூறிய ரயில்வே ஊழியருக்கு பாதுகாப்பு விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ரயில் சக்கர அமைப்பில் (போகி) இருந்த விரிசலை கண்டுபிடித்த செங்கோட்டை ரயில்வே பணியாளர் ரகுபதிக்கு பாதுகாப்பு விருதை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் திரு. பி. அனந்த் வழங்கினார்.

வண்டி எண் 16102 கொல்லம் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் நேற்று செங்கொட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது. அந்த ரயிலில் செங்கோட்டை ரயில் நிலைய வண்டி மற்றும் வேகன் டெக்னீஷியன் ரகுபதி வழக்கமான பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எஸ் 3 கோச்சின் (இஞ்சினிலிருந்து 7 வது பெட்டி) அடிப்பகுதியில் சக்கர அமைப்பில் (போகி) விரிசல் இருப்பதை கண்டுபிடித்தார். உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக பயணிகள் மாற்று கோச்களில் அமரவைக்கப்பட்டு, அந்த எஸ் 3 கோச் ரயிலில் இருந்து கழற்றி விடப்பட்டது. தொடர்ந்து மதுரையில் அந்த ரயிலில் புதிதாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டு சென்னை புறப்பட்டது.

ரயிலில் இருந்த விரிசலை கண்காணித்து தகவல் தெரிவித்த ரகுபதிக்கு அவரது பொறுப்புணர்வு, உடனடி அறிக்கை மற்றும் ஒட்டு மொத்த பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மதுரை கோட்டத்தின் வாராந்திர பாதுகாப்பு கூட்டத்தில் பாதுகாப்பு விருது வழங்கப்பட்டது. மதுரை கோட்ட மேலாளர் அனந்த் இந்த விருதை வழங்கி ரகுபதியை பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ரமேஷ் பாபு, முதுநிலை கோட்ட இயந்திரவியல் பொறியாளர் சதீஷ் சரவணன், மூத்த கோட்ட பாதுகாப்பு அதிகாரி திரு. மொஹிதீன் பிச்சை உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story