ஊரக உள்ளாட்சி தேர்தல்: தென்காசியில் பாஜகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

ஊரக உள்ளாட்சி தேர்தல்: தென்காசியில் பாஜகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

தென்காசியில் பாஜக மற்றும் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தென்காசியில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தென்காசி யூனியன் 7வது வார்டு வேட்பாளர் பூத்தாய், தென்காசி மாவட்ட 8வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக அதிமுக சார்பில் வழக்கறிஞர் அருண் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்களை ஆதரித்து இரட்டை இலை மற்றும் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய சிறுபான்மையினர் அணி செயலாளர் வேலூர் வழக்கறிஞர் செய்யது இப்ராஹீம், மாநில சிறுபான்மை அணி செயலாளர் கல்வாரி தியாகராஜன், தென்காசி வடக்கு ஒன்றிய தலைவர் ஐயப்பன் வடக்கு ஒன்றிய பார்வையாளர் மாரியப்பன், தெற்கு ஒன்றிய தலைவர் முருகன் தெற்கு ஒன்றிய பார்வையாளர் செந்தூர் பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேஸ்வரன்,மாவட்ட ஓபிசி அணி பொதுச் செயலாளர் ஜெய்சங்கர், வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் பத்மநாபன், அதிமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சேகர், ஊரக உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர் மாரியப்பன், செங்கை முத்தையா, செங்கை வெள்ளை துரை பாண்டியன், அண்ணமராஜா, அதிமுக தென்காசி வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அதிமுக வல்லம் கிளைச் செயலாளர் முருகேசன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் அனைத்து வீடுகளிலும் தாமரை சின்னத்திற்கும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.

Tags

Next Story
ai solutions for small business