ஊரக உள்ளாட்சித் தேர்தல்: கடையநல்லூர் ஒன்றியத்தில் பாமக மனுதாக்கல்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: கடையநல்லூர் ஒன்றியத்தில் பாமக மனுதாக்கல்
X

நெடுவயல் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட மாவட்ட விவசாய சங்க செயலாளர் ராஜேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நெடுவயல் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு பாமக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இரண்டு கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் முதற்கட்டமாக வருகிற 6-ஆம் தேதி ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஒன்றியங்களுக்கும், 9-ஆம் தேதி தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் ஆகிய ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைய இருப்பதால் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் 147 ஊராட்சி உறுப்பினர் பதவி, 16 ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, 12 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நெடுவயல் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட மாவட்ட விவசாய சங்க செயலாளர் ராஜேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பாளருடன் மாநில இளைஞர் அணி செயலாளர் முருகசாமி, மாநில துணைத் தலைவர் அய்யம்பெருமாள், மாநில துணை பொதுச் செயலாளர் திருமலைக்குமாரசாமி யாதவ், மாவட்ட செயலாளர் சீத்தாராமன் ஆகியோர் உடன் சென்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்