போதிய ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை; பள்ளியை முற்றுகையிட்ட மக்களால் பரபரப்பு
பொது மக்களிடம் காவல் ஆய்வாளர் ஹரிஹரன் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்த படம்
தென்காசி அருகே 65 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் பாரம்பரியமிக்க பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமனம் செய்து தொடர்ந்து பள்ளியை நடத்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் இலத்தூர் பகுதியில் சுமார் 65 ஆண்டுகளாக லட்சுமி ஹரிஹர உயர்நிலைப்பள்ளி (அரசு நிதியுதவி பெறும் பள்ளி) செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தொடக்க காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பயின்ற நிலையில், தற்போது நூற்றுக்கும் குறைவாக மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் பள்ளியில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்படும் என்ற தகவல் பொதுமக்களிடைய பரவியதால் பொதுமக்கள் இன்று பள்ளி முற்றுகையிட்டனர்.
மேலும் பள்ளியில் போதிய ஆசிரியர் இல்லாத காரணத்தினால் பள்ளி மாணவ மாணவர்களை வேறு பள்ளியில் சேருவதற்கு தலைமை ஆசிரியரே சிபாரிசு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மாணவர்களை தொடர்ந்து படித்திட வழிவகை செய்ய வேண்டும் என்று கோரி பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஆய்க்குடி சரக காவல் ஆய்வாளர் அரிகரன் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.
65 ஆம் ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் பாரம்பரியமிக்க இப்பள்ளியை தொடர்ந்து நடத்திட வேண்டும். அரசும், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் இப்ப பள்ளிக்கு தேவையான போதிய ஆசிரியர்கள் நியமித்து மாணவர்களின் நலனை காத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu