புளியரை ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு: அதிமுக எம்எல்ஏ சாலை மறியல்
கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி தலைமையில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் புளியரை ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு சம்பவம் கடையநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி தலைமையில் சாலை மறியல்.
தென்காசி மாவட்டம் புளியரை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கு இன்று மறைமுக தேர்தல் நடந்தது. அப்போது அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர் சரவணன், திமுகவைச் சேர்ந்த வேட்பாளர் குருமூர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே போட்டி நிலவியது. இதில் அதிமுகவைச் சேர்ந்த 8 வார்டு கவுன்சிலர்களும் திமுகவைச் சேர்ந்த 4 கவுன்சிலர்களும் இதில் அடங்குவர். அப்போது அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க செல்லும் போது திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது
அப்போது பெண் உறுப்பினர்களின் சேலையை இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியதால் தற்போது அங்கே துணைத் தலைவர் தேர்தலுக்கான தேர்தலுக்கான தேர்தல் தற்போது நிறுத்திவைகப்பட்டது. இதனை தொடர்ந்து கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி குட்டியப்பா தலைமையில் அதிமுக-வினர் கேரளா செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து அங்கு வந்த தாசில்தார், திட்ட இயக்குனர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். அதுவரை 8 வார்டு உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி கலைந்து சென்றனர். ஆட்சி நியாயமாக நடக்கிறது என்று ஸ்டாலின் கூறி வருகிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். தென்காசி மாவட்டம் புளியரையில் நடைபெற்ற இந்த சம்பவமே தமிழகத்தில் நடக்கின்ற ஆட்சிக்கு உதாரணம் என்று கடையநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu