கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே.16ல் ஆர்ப்பாட்டம்
கேரளாவிற்கு தொடர்ந்து கடத்தப்படும் கனிம வளத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 16ஆம் தேதி புளியரையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு.
தென்காசி மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்க்கு மணல், ஜல்லி, குண்டு கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் நாள்தோறும் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு செல்லும் வாகனங்களால் தமிழகத்தில் தென்காசி மாவட்ட பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல், விபத்து, சாலைகள் சேதம் அடைவது என பல பிரச்சனைகள் தொடர்ந்து வருகிறது. எனவே தமிழகத்தில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகக் கொண்டு செல்லும் வாகனங்களை அவ்வாறு கனிம வளங்கள் கொண்டு செல்லும் நாடுகளுக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு முறை தான் செல்ல வேண்டும் என்ற பாஸ் வசதியும் உள்ளது. ஆனால் அதை அதிக அளவில் ஒரு நாளைக்கு பயன்படுத்துவதை தடுத்து நிறுத்தக் கோரி சமூக ஆர்வலர்கள், அரசியல் அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமூக நல அமைப்புகள் சார்பில் கேரளாவிற்கு கனிம வளங்களை கொண்டு செல்வதை தடுக்க கோரி தமிழக கேரள எல்லையான புளியரையில் வருகிற 16-ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று செங்கோட்டை வட்டாட்சியர் கந்தசாமி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அரசு கனிம வளங்களை கொண்டு செல்ல அனுமதி அளித்ததை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் அறிவிக்கப்பட்ட 16-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என சமூக நல அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 16-ஆம் தேதிக்குள் அரசு கனிம வளம் கொண்டு செல்வதற்கான அனுமதியை திரும்ப பெற்றால் போராட்டம் நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu