அறநிலைய துறை நிலத்தை அளக்க எதிர்ப்பு: தென்காசி அருகே கோவில் முன் போராட்டம்

அறநிலைய துறை நிலத்தை அளக்க எதிர்ப்பு: தென்காசி அருகே கோவில் முன் போராட்டம்
X

செங்கோட்டை அருகே கோவில் முன் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களின் ஒரு பகுதி.

அறநிலைய துறை நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்து தென்காசி அருகே கோவில் முன் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

அறநிலையத்துறை இடம் அளக்கப்போவதாக வெளியான தகவலால் கோவில் முன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழியில் திருமலைக்குமாரசாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு ஏராளமான விளைநிலங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளது. இதனை குத்தகைக்கு எடுத்து பலர் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் பண்பொழி திருமலா புரத்தில் தேவேந்திர குல வெள்ளாளர் சமுதாயத்திற்குட்பட்ட சந்தனமாரியம்மன் கோவில் மற்றும் முப்பிடாதி அம்மன் கோவில் உள்ளது. இது சர்வே எண் 48/1 ல் அமைந்துள்ளதாகவும் இந்த சர்வே நம்பரில் 16 ஏக்கர் இடம் உள்ளதாகவும் அந்த 16 ஏக்கரில் ஒன்றரை ஏக்கர் இடம் திருமலைக்கோவிலுக்கு சொந்தமான இடம் என கூறி அந்த இடத்தை அளக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த 120 க்கும் மேற்பட்டோர் கோவில் வாசல் முன்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் கோட்டாட்சியர் மூலம் சமாதான கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என கூறியதால் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!