திரிபுரா அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம்

திரிபுரா அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவினர்.

வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம்.

திரிபுராவில் ஆளும் பா.ஜ.க அரசின் ஆதரவுடன் நடத்தப்படும் வழிபாட்டுத் தலங்கள் மீதான தொடர் தாக்குதலை கண்டித்தும், வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தென்காசி மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் லுக்மான் ஹக்கீம் தலைமை தாங்கினார்.

தேசிய செயற்குழு உறுப்பினர் முகம்மது அலி ஜின்னா, பாப்புலர் ஃப்ரண்ட் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது இப்ராஹீம் உஸ்மானி மற்றும் நெல்லை மண்டல தலைவர் திப்பு சுல்தான் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவர் யாசர்கான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜமாத்தார்கள், சமூக ஆர்வலர்கள், பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் நகர, கிளை நிர்வாகிகள் உட்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்