கடையநல்லூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் துறையினர்
கடையநல்லூரில் காவல் துறையினர் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதேபோல் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடு அய்யாபுரம் பகுதியில் காவல்துறையினர் பொதுமக்களிடம் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் கட்டாயம் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். 18 வயது பூர்த்தியடையாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டத்தின்படி குற்றமாகும் அவ்வாறு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்களின் மேல் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 1098, எதிரான குற்றங்களுக்கு 181 தகவல் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
மேலும் 18 வயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மோட்டார்சைக்கிளை வழங்கக்கூடாது எனவும் அப்படி வழங்கினால் பெற்றோர்களின் மீது வழக்கு பதியப்படும் எனவும் பழைய வாகனங்களை வாங்கும்போது பெயர் மாற்றாமல் ஓட்டக்கூடாது, பழைய வாகனங்களை விற்பனை செய்கின்ற உரிமையாளர்கள் கண்டிப்பான முறையில் பெயர் மாற்றி கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் காவல்துறையினர் அபராதம் விதிக்கும் போது அதன் உரிமையாளரே அபராதம் கட்ட வேண்டிய நிலை ஏற்படும். எனவே வாங்குபவரின் பெயருக்கு வாகனத்தை உடனடியாக மாற்றி விட வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu