சாலையில் கிடந்த தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு போலீசார் பாராட்டு

சாலையில் கிடந்த தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு போலீசார் பாராட்டு
X

கடையநல்லூரில் சாலையில் கிடந்த தங்க நகையை காவல்துறையினரின் உதவியுடன் உரிய நபரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு.

சாலையில் கிடந்த தங்க நகையை காவல்துறையினரின் உதவியுடன் உரிய நபரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு.

சாலையில் கிடந்த தங்க நகையை காவல்துறையினரின் உதவியுடன் உரிய நபரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மருத்துவமனையின் அருகே இஸ்மாயில் என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது சாலையில் தங்க நகை கிடந்துள்ளது. சமூக வலைதளம் மூலம் அறிவிப்பு செய்து அதன் உரிமையாளரை கண்டுபிடித்து அதனை காவல்துறையினரின் முன்னிலையில் உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அடுத்தவரின் பொருளுக்கு ஆசைப்படாமல் அதை உரிய நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு தங்க நகையை ஒப்படைத்த இஸ்மாயில் என்பவரை கடையநல்லூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் சால்வை அணிவித்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்