வியாபாரிகளுக்கு போலீசார் கொரோனா விழிப்புணர்வு

வியாபாரிகளுக்கு போலீசார் கொரோனா விழிப்புணர்வு
X

தென்காசி மாவட்டம் சுரண்டையில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரையில் வியாபாரிகள் சங்க பிரமுகர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பு பயிற்சி அளித்தனர். இதில் கொரோனா தொற்றை தடுப்பதில் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு விதிமுறைகள் கண்டிப்பாக கடைபிடித்தல், இன்று முதல் இரவு 9 மணிக்கு மேல் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் 9 மணிக்கு மேல் கடைகளை திறந்து வைக்கவோ வெளியில் நடமாடவோ கூடாது எனவும் மாஸ்க் அணிதல், கிருமிநாசினி உபயோகப்படுத்துதல், சமூகவிலகலை கடைபிடித்தல் பொது இடத்தில் எச்சில் துப்பக்கூடாது, திருமண வீடு, துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து விளக்கி இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

கூட்டத்தில் தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை வியாபாரிகள் சங்க தலைவர் களஞ்சியம், மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் முருகன், ஹோட்டல் சங்க நிர்வாகிகள் செல்வகனி, பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!