Police Arrested a Woman கடையநல்லூரில் அருகே டாக்டர் வீட்டில் திருடிய பெண் கைது

Police Arrested a Woman  கடையநல்லூரில் அருகே டாக்டர்   வீட்டில் திருடிய பெண் கைது
X

 திருட்டில் ஈடுபட்ட பெண்ணையும் அவரிடம் இருந்து விற்கப்பட்டபொருட்கள்.

Police Arrested a Woman கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் அரசு பல் மருத்துவர் வீட்டில் திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்களை போலீஸ் மீட்டது.

Police Arrested a Woman

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் வ உ சி தெருவை சேர்ந்தவர் லதா. இவர் தென்காசி அரசு மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன் திருமணத்திற்கு செல்வதற்காக பீரோவில் இருந்த நகைகளை எடுக்க பீரோ சாவியை அவர் தேடி உள்ளார் .சாவி கிடைக்காததால் பீரோவை உடைத்து பார்த்துள்ளார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் ,பணம் உள்ளிட்டவை காணவில்லை என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கடையநல்லூர் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.புகாரின் பேரில் கடையநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மருத்துவர் லதாவின் வீட்டில் வேலை பார்ப்பவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் வீட்டில் வேலை செய்து வந்த கிருஷ்ணாபுரம் செவல்விளை தெருவை சேர்ந்த செல்வி பீரோவில் இருந்த பணம், நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. அவரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சில நகைகளை அவர் விற்பனை செய்ததும் ,சில நகைகளை உருக்கியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். திருடப்பட்ட நகை மற்றும் ரொக்கத்தின் மதிப்பு ரூ. 7.50 லட்சம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!