கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரி மின் கம்பத்தில் மோதி விபத்து
கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரி மின் கம்பத்தில் மோதி விபத்து- இரும்பு மின் கம்பியை வேரோடு இழுத்துச் சென்ற நிலையில் அலறி அடித்துக் கொண்டு ஓடிய பொதுமக்கள்.
தமிழக-கேரளா எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை வழியாக நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்களில் கனிம வளங்களை ஏற்றி கொண்டு கேரளாவிற்கு சென்று வரும் நிலையில், இந்த வாகனங்கள் அனைத்தும் தற்போது இலத்தூர், கணக்கப்பிள்ளை வலசை, பண்பொழி, செங்கோட்டை வழியாக உள்ள கிராமப்புற சாலைகளில் சென்று கேரளாவிற்கு சென்று வரும் நிலையில், இந்த வழியாக கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த கனரக லாரி ஒன்று சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த மின் கம்பத்தின் மீது மோதி, இரும்பு மின் கம்பத்தை வேரோடு புடுங்கி சென்றது.
இந்த நிலையில், மின் வயரானது ஒன்றோடு ஒன்றாக உரசி, லாரியின் மீது பட்டு தீப்பொறிகள் கிளம்பிய நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடி சென்றுள்ளனர்.
அதனை தொடர்ந்து, அந்த பகுதியில் மின் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்ட நிலையில் அந்த பகுதிக்கு விரைந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் செங்கோட்டை போலீசார் கவன குறைவாக லாரியை இயக்கி வந்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுரான புனலூர் பகுதியை சேர்ந்த வினிஸ் என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்ற நிலையில், சுமார் 6 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அந்த பகுதியில் மீண்டும் மின்கம்பம் அமைக்கப்பட்டு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும், கிராமப்புற சாலைகள் வழியாக கனரக வாகனங்களை இயக்குவதால் மிகப்பெரிய விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும், ஆகவே கனரக வாகனங்களை அவ்வழியாக இயக்குவதை தடை செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu