அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு
X

வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்.

புளியரை சோதனைச் சாவடியில் அதிக பாரம் ஏற்றி வந்த 10 கனரக வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் வாகனங்களை கண்காணிக்கும் விதமாக தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில் ஜல்லி கற்களை ஏற்றி வந்த 10 லாரிகளுக்கு, தலா 2000 ரூபாய் வீதம் 20,000 ரூபாயும், ஒவ்வொரு லாரியிலும் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக எடை இருந்த வகையில் அதிகமாக உள்ள எடைக்கு 1 கிலோவுக்கு 1 ரூபாய் வீதம் 53970 ரூபாயும் மொத்தமாக 73970 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!