புளியரையில் அதிக பாரம் ஏற்றி வந்த வந்த வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

புளியரையில் அதிக பாரம் ஏற்றி வந்த வந்த வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு
X

அதிக பாரம் ஏற்றி வந்ததால் அபராதம் விதிக்கப்பட்ட லாரிகள்

செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனைச் சாவடியில் அதிக பாரம் ஏற்றி வந்த 10 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் வாகனங்களை கண்காணிக்கும் விதமாக செங்கோட்டை அருகே தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் காவல்துறையினர் 24 மணி நேரமும் சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில் வைக்கோல் லோடு ஏற்றி வந்த 10 லாரிகளுக்கு தலா 2500 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் இத்தகைய கடும் நடவடிக்கை மூலம் தற்போது புளியரை சோதனைச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி முறையாக செல்லும்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!