துணை ராணுவம்,போலீசார் கொடி அணிவகுப்பு

துணை ராணுவம்,போலீசார் கொடி அணிவகுப்பு
X

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரையில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.

தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை அமைதியாகவும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் தேர்தல் ஆணையம் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசாருடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி தென்காசி மாவட்டம் முழுவதும் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.‌இதில் சுரண்டை அருகே சாம்பவர்வடகரையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) அச்சன்புதூர் வேல்கனி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து,மற்றும் துணை ராணுவத்தினரும், போலீசாரும் சாம்பவர்வடகரை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக கொடி அணிவகுப்பு நடத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!