விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: செங்கோட்டையில் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு
செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு நகரின் முக்கிய பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்திய துணை ராணுவ படையினர்
-முதல் முதலாக விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு துணை ராணுவ படையினரும், தமிழக காவல்துறையினர் ஒன்றிணைந்து நடத்தி வரும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
செங்கோட்டை நகரப் பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பதற்றத்தை தணிக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடு.தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியில் தற்போது துணை ராணுவ படையினரும், தமிழக காவல்துறையினரும் ஒன்றிணைந்து தற்போது கொடி அணிவிப்பை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, கடந்த சில வருடங்களுக்கு முன்பு செங்கோட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மிகப்பெரிய மதக் கலவரம் ஏற்பட்ட நிலையில், இந்த கலவரமானது செங்கோட்டை நகரப் பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, பல்வேறு உயர் அதிகாரிகள் செங்கோட்டை பகுதியில் முகாமிட்டு இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை எட்டிய நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலமானது நடைபெற்றது.
அந்த வகையில், வருகின்ற 17-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவானது, வெகு சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தற்போது தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் துணை ராணுவ படையினரும், தமிழக காவல்துறையினரும் ஒன்றிணைந்து கொடி அணிவகுப்பை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கொடி அணி வகுப்பில் 45 துணை ராணுவ படைவீரர்கள் உட்பட 105 காவலர்கள் தற்போது இந்த கொடி அணிவகுப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கொடி அணிவகுப்பானது செங்கோட்டை நகர பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் வீரர்கள் ஆயுதங்களை ஏந்தியபடி கொடி அணி வகுப்பை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu