பேரூராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: அனைத்து சமுதாய கூட்டத்தில் தீர்மானம்

பேரூராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: அனைத்து சமுதாய கூட்டத்தில் தீர்மானம்
X

சாம்பவர்வடகரை பேரூராட்சி தொடர்ந்து பேரூராட்சியாக செயல்பட வேண்டும் என அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சாம்பவர்வடகரை தொடர்ந்து பேரூராட்சியாக செயல்பட வேண்டும். அனைத்து சமுதாய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாம்பவர்வடகரை பேரூராட்சி தொடர்ந்து பேரூராட்சியாக செயல்பட வேண்டும் என சாம்பவர்வடகரையில் நடைபெற்ற அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சியை நகராட்சியாக உயர்த்த இப்பகுதி பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்‌. இதனை தொடர்ந்து தென்காசி எம்எல்ஏ பழனி நாடார், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் நேரு ஆகியோரை‌ நேரில் சந்தித்து வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் சுரண்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் நேரு அறிவித்தார்.

இதனை தொடர்ந்து சுரண்டை பேரூராட்சியின் அருகில் உள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளை இணைத்து செயல்பட மாவட்ட நிர்வாகம் தரப்பில் முதல்கட்ட பணிகளாக அப்பகுதி பொதுமக்களிடையே அதிகாரிகள் கருத்து கேட்பு கூட்டம்‌ நடத்தப்பட்டது. இதில் சாம்பவர்வடகரை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அனைத்து தரப்பினரும் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து முதல்கட்டமாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது.

அதனை தொடர்ந்து இந்து நாடார் திருமண மண்டபத்தில் 20 சமுதாயத்தை சேர்ந்த நாட்டாண்மைகள் மற்றும் நிர்வாகிகள், அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.‌ கூட்டத்தில் பேசிய அனைத்து பிரமுகர்களும் சாம்பவர்வடகரை பேரூராட்சி தொடர்ந்து தனித்து பேரூராட்சியாகவே இயங்க வேண்டும் சுரண்டை நகராட்சியுடன் இணைக்க கூடாது என தெரிவித்தனர் ‌‌

மேலும் சாம்பவர்வடகரை பேரூராட்சி பகுதி பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து மனு வழங்கி வலியுறுத்தவும் இதே நிலை நீடித்தால் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்