வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை அரங்கம் துவக்கம்

வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை அரங்கம் துவக்கம்
X

ஒரே நாளில் நான்கு குழந்தைகள் சுகப் பிரசவத்தின் மூலம் பிறந்ததை பாராட்டி அந்த தாய்மார்களுக்கு ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின்கீழ் பணப்பலன்களுக்கான காசோலை வழங்கப்பட்டது.

வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை அரங்கம் தொடங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் வடகரை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை அரங்கம் மறுசீரமைக்கப்பட்டு வந்தது. இதனை தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயலாளருமான மரு. ஜெஸ்லின் தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து பேசிய அவர் அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி எடுத்துரைத்து வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவத்திற்கு வந்து பயன்பெறுமாறு அறிவுறுத்தினார். குடும்பநல அறுவை சிகிச்சைகள் மற்றும் சிசேரியன் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ள இருப்பதாக கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகரையில் ஒரே நாளில் நான்கு குழந்தைகள் சுகப் பிரசவத்தின் மூலம் பிறந்ததை பாராட்டி அந்த தாய்மார்களுக்கு JSY (ஜனனி சுரக்ஷா யோஜனா) திட்டத்தின்கீழ் உள்ள பணப்பலன்களுக்கான காசோலையை வழங்கினார்.

விழாவில் வடகரை வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மாவட்ட செயலாளர்(DPH wing) மரு. முகமது இப்ராஹிம், மகப்பேறு சிறப்பு மருத்துவர் சங்கரி, பொறுப்பு மருத்துவ அலுவலர் விஷால், மரு. செண்பகா, சித்த மருத்துவர், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!