புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு இடையூறு: திமுக கவுன்சிலர் தர்ணா

திமுக நகர செயலாளரை கண்டித்து திமுக கவுன்சிலர் நகராட்சி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்
புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு இடையூறு செய்து வரும், திமுக நகர செயலாளரை கண்டித்து திமுக கவுன்சிலர் செங்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..
தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 11, 12, 13, 14 ஆகிய 4 வார்டுகளில் வசித்து வரும் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு தற்போது அந்த பகுதியில் வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையானது மிகவும் குறுகளாக உள்ளதால், பொதுமக்கள் நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் சாலையில் காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் கொடுத்த சூழலில், தற்போது புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது செங்கோட்டை திமுக நகர செயலாளராக உள்ள வெங்கடேஷ் என்பவர் புதிதாக கட்ட திட்டமிட்டுள்ள ரேஷன் கடையை அந்தப் பகுதியில் அமைக்க கூடாது என இடையூறு செய்து வருவதாகவும், இதனால் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான ரேஷன் கடை அமைக்க முடியாமல் இருப்பதாக கூறி ஏராளமான பொதுமக்கள் இன்று நகராட்சி ஆணையாளரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
தொடர்ந்து, ஆளுங்கட்சி நகர செயலாளருக்கு எதிராக நகராட்சி வாயில் முன்பு அமர்ந்து 12-வது வார்டு திமுக கவுன்சிலர் இசக்கிதுரை பாண்டியன் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu