கடையநல்லூரில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடையநல்லூரில், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு, ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில், கடையநல்லூர் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பாக, போஷன் அபியான் திட்டத்தின் கீழ், தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி, கொடிகுறிச்சி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டப் பணியாளர்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பாக, அதன் மேற்பார்வையாளர்கள் சுப்புலெட்சுமி, சிவகாமி, இந்திராகாந்தி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரமோகன், முருகன் ( திட்ட உதவியாளர்) ஆகியோர் கலந்து கொண்டு , பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, சத்தான உணவு முறைகள் பற்றி எடுத்துக்கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!