பள்ளி மாணவிகளுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்

கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பாக, போஷன் அபியான் திட்டத்தின் கீழ், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பாக மேற்பார்வையாளர்கள் சுப்புலட்சுமி , இந்திராகாந்தி மற்றும் குழந்தைகள் மையப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு இரத்த சோகை நோய் தடுப்பு முறைகள் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இரும்புச்சத்து நிறைந்த உணவு முறைகள் மற்றும் பாரம்பரிய உணவுகள் பற்றி எடுத்துக்கூறினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!