செங்கோட்டை நகரமன்ற தலைவரின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

செங்கோட்டை நகரமன்ற தலைவரின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி
X

 நகர மன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர மன்ற திமுகவைச் சேர்ந்த தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி என நகராட்சி ஆணையர் அறிவிப்பு

தென்காசி மாவட்டம் செங்கோட்டை திமுக நகர் மன்ற தலைவர் ராமலக்ஷ்மி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி திமுக கவுன்சிலர்கள் உட்பட அதிமுக, பாஜக உட்பட அனைத்து கவுன்சிலர்களும் ஆணையரிடம் கடந்த டிசம்பர் மாதம் மனு அளித்தனர்.

இந்நிலையில் இன்று செங்கோட்டை நகர மன்ற கூட்டரங்கில் வைத்து நடைபெற்று வரும் வாக்கெடுப்பில் மொத்தம் 24 கவுன்சிலர்களில் திமுகவினை தவிர அதிமுக பாஜகவை சேர்ந்த 13 மட்டுமே பங்கெடுத்துள்ளனர்.

மேலும் வாக்கெடுப்பின் போது பார்வையாளர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு கூட்டரங்கில் அனுமதி இல்லை என கூறப்பட்ட நிலையில் கவுன்சிலர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

11:30 மணிக்கு கூட்டரங்கில் கவுன்சிலர்கள் கூடிய நிலையில் 12 மணி வரை நேரம் கொடுக்கப்பட்ட நிலையில் 50% கவுன்சிலர்கள் வராததால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக நகராட்சி ஆணையாளர் சுகந்தி அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் ஆணையரிடம் வாக்கெடுப்பு நடத்த கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story