இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய எக்ஸ்ரே மிஷின்

இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்   புதிய எக்ஸ்ரே மிஷின்
X

இலத்தூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எக்ஸ்ரே மிஷின் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டது

இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மதிப்புடைய எக்ஸ்ரே மிஷின் துவக்கி வைக்கப்பட்டது

கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இலத்தூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் அனிதா அவர்களின் ஆலோசனையின் பேரில் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மதிப்புடைய எக்ஸ்ரே மிஷின் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டது

நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வி தலைமையில் இலத்தூர் ஊராட்சித் தலைவர் திருமதி முத்துலட்சுமி மற்றும் சீவ நல்லூர் ஊராட்சி தலைவர் திருமதி முத்துமாரி துவக்கி வைத்தனர்

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதா, சிக்கந்தர்பீவி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் மற்றும் மருத்துவ அலுவலர்கள் மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!