அரசு தொடக்கப்பள்ளியில் புதிய மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு ....

அரசு தொடக்கப்பள்ளியில் புதிய மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு ....
X

 பள்ளியில் சேர்ந்த புதிய மாணவர் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பூ மற்றும் பிஸ்கட்ஸ் வழங்கினர்.

New Students Honoured தென்காசி அருகே அரசு தொடக்கப் பள்ளியில் புதிதாக சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு கீரிடம் அணிவித்தும், மலர் கொடுத்தும் ஊர்வலமாக அழைத்து சென்று பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் வரவேற்றனர்.

New Students Honoured

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுமட்டும் அல்லாமல் அந்தந்த பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களும் சிறப்பான செயல்பாடுகளினாலும் நவீன உத்திகளினாலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை உயர்த்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் போட்டி போட்டு வருவது கல்வித்துறை வளர்ச்சியின் சாதனையாக கருதப்படுகிறது.

தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் நூறாண்டுகள் கடந்த தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2019 ஆம் ஆண்டு 13 குழந்தைகள் பயின்று வந்த நிலையில், இப்பள்ளியில் புதிதாக பொறுப்பேற்ற தலைமையாசிரியர்,விடுப்பு எடுக்காமல் வரும் குழந்தைகளுக்கு ரூ.10 பரிசும், பிறந்த நாள் காணும் குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்குதல் போன்று இப்பள்ளியில் கல்வி பயில்வதற்கான ஆர்வத்தை தூண்டும் வகையில், குழந்தைகளுக்கு பல்வேறு பரிசு திட்டங்களை அறிவித்துள்ளார். இதன் விளைவாக இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் 10 நாட்களில் 36 குழந்தைகள் இப்பள்ளியில் சேர்ந்துள்ளனர். இன்று அவர்களை வரவேற்கும் விதமாக குழந்தைகளுக்கு கீரிடம் அணிவித்து, ரோஜாப்பூ வழங்கி அச்சன்புதூரில் ஊர்வலமாக அழைத்து சென்று பள்ளியில் சேர்த்தனர்.

இந்த நிகழ்ச்சியில், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர், மற்றும் ஆசிரியர்களின் இந்த செயல் சுற்றுவட்டார பொதுமக்களிடமும், குழந்தைகளின் பெற்றோரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Tags

Next Story