செங்கோட்டை அருகே புளியரை கோவிலில் மாதாந்திர சிறப்பு வழிபாடு

செங்கோட்டை அருகே புளியரை கோவிலில் மாதாந்திர சிறப்பு வழிபாடு
X

புளியறை வழிகாட்டும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர பவுர்ணமி சிறப்பு வழிபாடடில் கலந்து கொண்ட பக்தர்கள்.

Today Temple News in Tamil -செங்கோட்டை அருகே உள்ள புளியறை மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் மாதாந்திர பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Today Temple News in Tamil -தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியறை வழிகாட்டும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் மாதாந்திர பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவில் கருப்பசாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடந்தது. அதனைதொடா்ந்து அருள்வாக்கு சித்தர் ஐயப்பன்சாமி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சியும், தொடா்ந்து அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீராமஜெயம் அறக்கட்டளையின் சார்பில் செய்யப்பட்டிருந்தது. விழாவில் தமிழகம், மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அருள்வாக்கு பெற்று சென்றனா்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story