குளம், கால்வாய்களை காணவில்லை: விவசாயிகள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

குளம், கால்வாய்களை காணவில்லை: விவசாயிகள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
X

காணாமல் போன குளம் தொடர்பான விளக்கம் கொடுக்கும் விவசாயிகள்.

மங்களாபுரம் கிராமத்தில் குளம் மற்றும் கால்வாய்களை காணவில்லை எனவும் குளத்தை மீட்டு தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்து மங்களாபுரம் கிராமத்தில் குளம் மற்றும் கால்வாய்களை காணவில்லை எனவும் குளத்தை மீட்டு தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்து மங்களபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. அப்பகுதியில் 600க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவசாய நிலங்களுக்கு பாசனமானது பன்னீர் பெரியகுளம் வழியாக பாசன வசதி பெறுகிறது.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கால்வாய்.

இந்த நிலையில் தற்போது பாசன வசதி பெறக்கூடிய பன்னீர் பெரிய குளத்தை காணவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

அதாவது பன்னீர் பெரியகுளமானது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குளத்தில் இருந்து விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்லக்கூடிய கால்வாயும் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது.

இவ்வாறு ஆக்கிரமிப்பு காரணமாக வருங்காலங்களில் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை எனவும் விவசாயிகள் வேதனை அடைகின்றனர். மேலும் ஊரின் சுற்றுவட்டார பகுதிகளில் குளத்தை காணவில்லை எனவும் விவசாயிகள் போஸ்டர் அடித்ததால் அதுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே தமிழக அரசு கவனத்தில் கொண்டு தங்களது வாழ்வாதாரமான விவசாயப் பணிகளை மேற்கொள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள குளத்தை மீட்டு தர வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!