மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபர் கைது

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபர் கைது
X
அச்சன்புதூர் அருகே, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காசிதர்மம் பகுதியில், தனது பெற்றோருடன் வசித்து வரும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம், அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்ற நபர் தவறான எண்ணத்துடன் நடக்க முயன்றுள்ளார். இதனைக் கேட்ட அப்பெண்ணின் தாயிடம், இதை வெளியே கூறினால் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அப்பெண்ணின் தாய், அச்சன்புதூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் வேல்கனி அறிவுரையின்படி, சார்பு ஆய்வாளர் சஞ்சய் காந்தி விசாரணை மேற்கொண்டு, மேற்படி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற காசிதர்மம் பகுதியை சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் கருப்பசாமி (45) மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!