தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு தினந்தோறும் கடத்தப்படும் கனிம வளங்கள்
தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு தினந்தோறும் கனிம வளங்கள் கடத்தப்படுவதை தவிர்க்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகம் - கேரளாவை இணைக்கின்ற வகையில் உள்ளது தென்காசி மாவட்டம். இங்கு கடையம், தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சிவகிரி, சங்கரன்கோவில், திருவேங்கடம், ஊத்துமலை, ஆலங்குளம், திருமலைக்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்குவாரிகள் மற்றும் எம்.சாண்ட் தயாரிப்பு நிலையங்கள் அமைந்துள்ளது. இங்கிருந்து அரசின் சட்ட விதிகளை மீறி திறந்தோறும் 300க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு கனம வளங்கள் பல ஆயிரம் டன் கொண்டு செல்லப்படுகிறது.
இதனால் தமிழகத்தின் இயற்கை வளம் அழிந்து வருவதுடன், நீர் ஆதாரமும் வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை பெரும் சேதம் அடைந்து வருகிறது. சட்டவிரோதமாக கடத்தப்படும் கனிம வளங்களை தடுத்து நிறுத்த பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வாகனங்களை சிறைப்பிடித்து போராட்டம் நடத்திய போதிலும் கனிம வள கடத்தலை தடுக்க முடியவில்லை. காரணம் இங்கிருந்து கனிம வளங்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்காகனது என்று கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu