தென்னை நார் குடோனில் நள்ளிரவில் தீ விபத்து

தென்னை நார் குடோனில் நள்ளிரவில் தீ விபத்து
X

நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்ட தென்னை நார் குடோன்.

தென்காசி அருகே தென்னை நார் உற்பத்தி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில் 100 டன் நார் சேதமானது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள அச்சன்புதூரில் ராஜா முகமது என்பவருக்கு சொந்தமான தென்னை நார் உற்பத்தி செய்யும் ஆலை உள்ளது. இந்த அலையில் சுமார் 100 டன் எடையுள்ள தென்னை நார்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

கடந்த சில ஆண்டுகளாகவே தென்னை நாருக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பதால் இந்த தென்னங்கூந்தல்கள் நாராக தயாரிக்கப்படாமல் அப்படியே சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இரவு இந்த ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் குவித்து வைக்கப்பட்டிருந்த 100 டன் மதிப்பிலான தென்னை கூந்தல்கள் எரிந்து சாம்பலானது.

தகவலறிந்து வந்த செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் நிலைய தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருந்தபோதும், காற்றின் வேகம் காரணமாக தொடர்ந்து தீ பரவி வருகிறது. இதனால் தீயை அணைக்கும் பணி பெரும் சவாலாக உள்ளது.

இந்த விபத்தில் நார் தயாரிக்க பயன்படும் நவீன இயந்திரங்களும் தீயில் சிக்கி நாசமானது. மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து அச்சன்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story